Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்நியச் செலாவணி மோசடி... டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கிய டி.டி.வி.தினகரன் மீது, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

டிடிவி

1996 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடிசெய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இதனிடையே, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார், டி.டி.வி.தினகரன். நீதிமன்ற விசாரணையின்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த தினகரன், 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று கூறினார். இதையடுத்து, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார், நீதிபதி மலர்மதி.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close