Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உண்மையில் மர்மம் இருக்கிறதா?

ஜெயலலிதா

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தமிழக மக்களுக்கு ஒரு சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது. அவர், உடல்நலக் குறையால் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இடையில் இருந்த 75 நாள்களும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்முதல் இறக்கும்வரை அவருடன் இருந்தது அவரின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலாதான். ஒவ்வொரு முறையும் கட்சியினரும், பிறரும் ஜெயலலிதாவைச் சந்திக்க மருத்துவமனை சென்றபோது அவர்களுக்குப் பதில் கூறியது சசிகலாதான். ஜெயலலிதாவின் உறவினர்களோ, கட்சியின் முக்கிய உறுப்பினர்களோ அவரைச் சந்திக்கப் போனால், அவர்களை உள்ளே அனுப்பாமல் தடுத்தார் சசிகலா. அதற்குச் சிகிச்சையைக் காரணம் காட்டினார். பின்னர், ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அப்போலோ மருத்துவமனை வரத் தொடங்கினார்கள். இதுவே, மக்களுக்கு மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், ஜெயலலிதா எப்போது இறந்தார்... அவரின் சிகிச்சை பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடாமல் இருந்ததற்கு காரணம் என்ன... அவர் சிகிச்சை எடுக்கும் போட்டோ அல்லது வீடியோ வெளியிடாதது ஏன்... சசிகலாவைத் தவிர மற்ற நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஜெயலலிதா ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் இதுபோன்ற மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்...

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close