Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலை விவகாரத்தில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷின் திடுக் பின்னணி!

இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகர்,  மற்றொரு மோசடி வழக்கிற்காக கோவை நீதி மன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

sukesh


இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டவுடன் டி.டி.வி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அந்தத் தகிடுதத்தங்களை டெல்லி போலீஸார் கண்டுபிடித்தனர். சுகேஷ் சந்திரசேகரும் அடுத்ததாக டி.டி.வி தினகரனும் கைதுசெய்யப்பட்டார்கள். சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், கோவை இரண்டாவது குற்றவியல் நீதி மன்றத்திலிருந்து  2010 ஆம் ஆண்டில் பதியப்பட்ட ஒரு மோசடி வழக்கிற்காக, சுகேஷ் சந்திரசேகரை ஜூன் 8 ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சுகேஷ் சந்திரசேகர் கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.


அந்த வழக்கு தொடர்பாக விசாரித்தபோது, " கடந்த  2010 ஆம் ஆண்டு,  கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஃபர்னிச்சர் கடை தொழில் அதிபர் ராஜவேலு என்பவரைப் போன் மூலமாகத் தொடர்புகொண்டு, ' நான் கர்நாடக  முதல்வரின் தனிச் செயலாளர் பேசுகிறேன். கர்நாடக அரசுக்குத் தேவையான ஃபர்னிச்சர்கள் வாங்க வேண்டும். அதற்கான டென்டரை உங்களுக்கு வாங்கித்தருகிறேன்' என்று பேசி ஏமாற்றியுள்ளார். ராஜவேலுவும் சுகேஷை நம்பி 2.5 லட்சம் கொடுத்துள்ளார்.

பிறகுதான் தெரிந்துள்ளது, சுகேஷ் ஏமாற்றுப் பேர்வழி என்று. இது தொடர்பாக ராஜவேலு 2011ல் புகார் கொடுக்க, சுகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளிவந்த சுகேஷ், வழக்கு விசாரணக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் சுகேஷுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. தலைமறைவாக இருந்த சுகேஷை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்ட பிறகு,  சட்டப்படி திகார் சிறை நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பி, இன்று விசாரணைக்கு வரவழைத்துள்ளார்கள். சுகேஷ் முன்பிருந்தே கிருமினல்தான் என்கிறார்கள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close