Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறிய நகரங்களில் விமான சேவை... ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழகத்தில் நெய்வேலி, ஓசூர், சேலம் ஆகிய சிறிய நகரங்களில் விமான சேவை தொடங்க உடான் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உடான்

அனைத்துத் தரப்பு மக்களும் பயணம்செய்யும் வகையில், குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்க, மத்திய அரசு உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில், ஒரு மணி நேரம் பயண தூரத்தைக்கொண்ட நகரங்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 500 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணம், 2 ஆயிரம் ரூபாய். இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில், வர்த்தக ரீதியிலான வளர்ச்சியை முன்னெடுக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனிடையே உடான் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 3 சிறிய நகரங்களில் விமான சேவையைத் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் கீழ் நெய்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய சிறு நகரங்களில் விமான சேவை தொடங்கவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close