Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா

கடந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை முடிந்ததும் ரவீந்திர ஜடேஜா, மெக்கானிக்கல் இன்ஜினீயர் ரிவா சோலங்கியைத் திருமணம் செய்தார். ரிவா சோலங்கி கர்ப்பம் தரித்திருந்தார். இந்தத் தகவலை கடந்த மார்ச் மாதம் ஜடேஜா உறுதிப்படுத்தினார். தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். 

லண்டன் செல்லும் முன் ‛கர்ப்பமான என் மனைவியை இங்கே விட்டுவிட்டு இங்கிலாந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் அருகில் இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதும் முக்கியம். குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க வேண்டும். இருந்தாலும் எங்கள் குடும்பத்தினர் என் மனைவியைப் பார்த்துக் கொள்வர்’ எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று காலை ரிவா சோலங்கி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். டெஸ்ட் அரங்கில் நம்பர் -1 பெளலரான ஜடேஜா, இந்தத் தகவல் அறிந்து கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. 

2015-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்தபோதுதான், தோனியின் மனைவி சாக்ஷி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் பொருட்டு, உடனடியாக அவர் இந்தியா திரும்பவில்லை. ஜடேஜாவும் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின்னரே இந்தியா வருவார் எனத் தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close