Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பி.ஜே.பியின் ஆட்டம் ஆரம்பம், முதல் பலி அ.தி.மு.க..!'

'தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது' என்று ஆருடம் சொல்கிறார் தி.மு.க முன்னாள் அமைச்சர் ராசா.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேற்கு ஒன்றியம் தி.மு.கவின் புதிய கிளை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி சுத்தமல்லி கிராமத்தில் நேற்று நடைப்பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புப் செயலாளருமான ராசா அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க அரசு இன்றைக்குச் செயல்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துகொண்டே இருக்கிறது. மக்கள் நலனைப்  பற்றி அ.தி.மு.க அரசு கவலை கொள்ளாமல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணியாகப் பிரிந்து மக்களைக் குழப்பும் ஆட்சியை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய இந்த அரசு முன்வரவில்லை. அ.தி.மு.க.வினர் அவர்களின் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இரட்டை இலை யார்க்கு என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது அவர், 'ஓ.பி.எஸ் தரப்பினரும், எடப்பாடி தரப்பினரும் ஒன்றறைக் கோடி தொண்டர்களின் ஆதரவு எங்களுக்குள்ளது. எனவே கண்டிப்பாக இரட்டை இலை எங்களுக்குக் கிடைக்கும் என்று மாறிமாறி சொல்லி வருகிறார்கள். அப்படி யாருக்குத்தான் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பி.ஜே.பி யின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

இன்றைக்கு மத்திய அரசு தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகளை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறது. இதற்கு அ.தி.மு.க பலிகிடாவாகப் போகும் நிலை உள்ளது.  இந்திய துணைக் கண்டத்தில் மாபெரும் அரசியல் தலைவராக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார். மத்திய அரசை எதிர்த்தும், விமர்சித்தும் தி.மு.கதான் துணிச்சலாக குரல் கொடுக்கிறது. ஸ்டாலின் தினம் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க ஆட்சி நடத்த மக்கள் விரும்புகிறார்கள். பி.ஜே.பி யின் முதல் பலி அ.தி.மு.க. பி.ஜே.பி-க்குத் தகுந்த பாடம் கற்பிக்க தி.மு.கவால் மட்டுமே முடியும்' என்று முடித்துக் கொண்டார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close