Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி தினகரன் திடீர் டெல்லி பயணம்..!

தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுநாள் வரை பரபரப்பு இல்லாமல் இருந்துவந்த தமிழக அரசியல், டி.டி.வி.தினகரன் ஜாமீனுக்குப் பிறகு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பக்கம், இரு அணிகள் இணைப்பு ஒரு பக்கம் எனத் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

TTV Dinakaran


டி.டி.வி தினகரனுக்கு 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி தினகரன் அணி என்று மூன்றாகப் பிரிந்து செயல்பட்டுவருகின்றன. இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.


இந்நிலையில், டி.டி.வி தினகரன் திடீரென்று நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர், டெல்லி சென்றதற்கான காரணம் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தினகரனின் டெல்லிப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close