Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குளம் தூர் வாரும் பணியில் ஊழல் நடக்கிறது' - ஸ்டாலின் 'பகீர்' குற்றச்சாட்டு

stalin

தமிழக அரசின் தூர் வாரும் பணியில் ஊழல் நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அணைகள் ஆகியவை தமிழக அரசால் தூர் வாரப்பட்டுவருகின்றன. நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் தி.மு.க-வினரும் ஈடுபடவேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். அதன்படி, மாவட்டரீதியாக தி.மு.க தொண்டர்கள் நீர்நிலைகளைத் தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நேரில் ஆய்வுசெய்துவருகிறார்.

இன்று, சென்னை கோவூர் பகுதியில் நடைபெற்ற குளத்தைத் தூர் வாரும் பணியில், ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழக அரசின் தூர் வாரும் பணியில் ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பெரும்பான்னை குறைந்தால், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை நேரில் சந்திப்போம். தமிழக அரசை பா.ஜ.க ஆட்டுவிப்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார். மக்கள் பணியைத் தவிர்த்துவிட்டு, ஆட்சியைத் தக்கவைப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்', என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close