Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

திருச்சியில், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நவீன் என்பவரை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். 

Goondas Act

திருச்சி மாவட்டம் மருங்காபுரியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், மார்ச் 18 ஆம் தேதி, உறையூர் நாச்சியார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, வாசுதேவன் என்பவர் காரிலும் ராஜா மற்றும் நவீன் ஆகியோர் பைக்கிலும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர்.

அவர்கள் மூவரும் சுப்ரமணியனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 5000 ரூபாயைப் பறித்துச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், உறையூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாரின் பிடியில் சிக்கிய மூன்று பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நவீன் என்கிற குமரவேல்மீது ஏற்கெனவே தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, உறையூர் காவல்நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், நவீன்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close