Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஏஓ-க்களை அதிரவைத்த திருச்சி கலெக்டர்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய வட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர்  ராசாமணி திடீரென ஆய்வுசெய்தார். கலெக்டரின் வருகையால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உத்தரவு மேலும் அவர்களை அதிரவைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய வட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி திடீரென ஆய்வுசெய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராசாமணி, 'கிராம நிர்வாக அலுவலகங்களை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை மனுக்களின் விவரங்களை முறையாக பதிவேட்டில் பதிந்து, தொடர்ந்து பராமரித்து வரவேண்டும்.  சாதிச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளுக்காக வரும் விண்ணப்பங்களைப் பதிந்து, உடனடியாக விசாரிக்க வேண்டும். விண்ணப்பங்களின் தற்போதைய  நிலைகுறித்து அவ்வப்போது பதிவுசெய்ய வேண்டும்.

பதிவேடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி அனைத்து நிலையிலுள்ள அலுவலர்களும் ஆய்வுக்கு வரும்போது அவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். பொதுமக்களை அலையவிடாமல், குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே கிராம நிர்வாக அலுவலர்களின் தலையாய கடமை. கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மூலம் பெறப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை, உடனுக்குடன் விசாரித்து உரிய பதிலைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், உதவித்தொகை கேட்பவர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்போடு உதவ வேண்டும். தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து, முழு நேரமும் கிராமங்களிலிருந்து பணியாற்ற வேண்டும்' என்று உத்தரவின் விளக்கத்தைக் கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close