Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு விழாவில் பங்கேற்க வந்த தி.மு.க எம்எல்ஏ-க்கள் திடீர் கைது! புதுக்கோட்டையில் பரபரப்பு

mla

புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வந்த மூன்று தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த அரசு விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்எல்ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தன.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, கட்சி அலுவலகத்திலிருந்து மூன்று எம்எல்ஏ-க்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது, அங்கு வந்த அரசு அதிகாரிகள், 'நீங்கள் விழாவில் பங்கேற்க வேண்டாம்' எனத் தெரிவித்து, அவர்களை அந்த அலுவலகத்திலேயே சிறைவைத்தனர். 'விழாவில் பங்கேற்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களைப் போனில் அழைத்தார்', என எம்எல்ஏ., ரகுபதி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் அதிகாரிகளை மீறி மூன்று எம்எல்ஏ-க்களும் விழாவில் பங்கேற்க கிளம்பிச்சென்றனர்.

உடனடியாக மூன்று எம்எல்ஏ-க்களையும் டிஎஸ்பி., பாலகுரு, ஆர்டிஓ., வடிவேல் பிரபு  ஆகிய அதிகாரிகள் கைதுசெய்தனர். புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் எம்எல்ஏ-க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, சிவமெய்யநாதன் ஆகியோர் அமரவைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close