Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதவி விலகுவேன்! அமைச்சர் உதயகுமார் திடீர் எச்சரிக்கை

'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிடில் பதவி விலகுவேன்' என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், தென் மாவட்ட மக்கள் பயனடைவர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்திப் பேசியுள்ளேன். மதுரையில் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம்.

தென் மாவட்ட மக்களின் தேவைகளைப் புரியவைப்பதற்காக எனது பதவியைத் துறப்பதற்குத் தயார். இது மத்திய அரசுக்குக் கொடுக்கும் அழுத்தம் கிடையாது. தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

மத்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதுகுறித்த கேள்விக்கு, அவரிடமே கேளுங்கள் என்றார்.

மதுரையில் பால் கலப்படம் செய்திருப்பதாக அமைச்சரே கூறியிருக்கிறார். அதுவும் உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, அதை மக்களிடம் நீங்களே சொல்லுங்கள் என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close