Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகச் சந்தைகளில் நுழைகிறதா பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை?

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை  விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரிசி, சர்க்கரை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்த, உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

plastic



சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதேபோல  கர்நாடகாவிலும் ஒருசில கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக, ஆதாரங்களுடன் சிலர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களால், மக்கள் மத்தியில் பதற்றம் நிலவிவருகிறது. உணவுப் பொருள்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்வதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். உயிருக்கேகூட ஆபத்து விளைவிக்கும்.

 

 

 

எனவே, ஒவ்வொரு மாநில அரசும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. 'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனாலும் தமிழக மக்களிடையே, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை பீதி அதிகரித்துவருகிறது. தமிழக அரசு இதுகுறித்து ஆய்வு நடத்த குழு அமைத்துள்ளது. இதுவரை ஆய்வு செய்த மாதிரிகளில், பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படவில்லை. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை தமிழகச் சந்தைக்கு வந்துள்ளதா, இனி வரும் வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதுகுறித்து, தமிழ்நாடு சிவில் சப்ளை துறையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரி சோமசுந்தரத்திடம் கேட்டோம். ”இந்தியாவில் சில மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சந்தையில் விற்பனைக்கு வந்தது உண்மைதான். ஆனால், தமிழகச் சந்தைகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரை உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படவில்லை. எனவே, தமிழக மக்கள் பயப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close