Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொரியாவுக்கே 5000 கார்களை விற்கும் ரெனால்ட்

கார்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு தென் கொரியா. ஆனால் பிரான்ஸை தலைமையாக கொண்டு இயங்கும் பிரபல ரெனால்ட் கார் நிறுவனம் தென் கொரியாவிற்கு தனது 5000 'கிளியோ' வகை கார்களை விற்க தீர்மானித்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகள் கொண்ட 'ரெனால்ட் சாம்சங்' கொரியாவில் இயங்குகிறது. கார் விற்பனையில் முன்னணீயில் இருக்கும் இந்த நிறுவனம் வரும் ஆகஸ்ட் முதல் கிளியோ வகை கார்களை இறக்குமதி செய்து விற்க முடிவு செய்திருந்தது. ஆசிய நாடுகளுக்கு ஏற்ப வாகனத்தில் பாதுகாப்பு மாற்றங்களை செய்யவேண்டியிருப்பதால் சற்று தாமதமாகிறது என அத  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

clio

"கிளியோ ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று. தொடர்ந்து ஏறுமுக விற்பனையிலும் இருக்கிறது.பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப மாறுதல் செய்தவுடன் விற்பனை தொடங்கும்" என  அதன் சிஇஒ டோங் தெரிவித்துள்ளார்.  கொரியாவில் உற்பத்தி செய்வதை விட ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்வது குறைவான செலவு பிடிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவாக தென் கொரிய  கார்களின் மார்கெட் என்பது நடுத்தர மற்றும் பெரிய கார்களின் சந்தையாக இருந்தது. தற்போது கிளியோ போன்ற கார்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பது புதிய செய்தியாக உள்ளதாக சந்தை பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close