Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட அயர்லாந்து கட்சியின் ஆதரவுடன் மீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் தெரசா மே! 

இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து அடங்கிய பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை 649 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பிரிட்டன் தெரசாமே


ஒரே இடத்துக்கு மட்டும் முடிவு வெளியாகவில்லை. முடிவுகள் வெளியான 649 இடங்களில் ஆளும் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியானது 318 இடங்களிலும், தொழிலாளர் (லேபர்) கட்சியானது 261 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகளான ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி 35 இடங்களிலும், லிபரல் டெமாக்ரட் கட்சியானது 12 இடங்களிலும், ஜனநாயக ஐக்கியக் கட்சியானது 10 இடங்களிலும் பசுமைக் கட்சி ஓரிடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 326 இடங்களை எந்தக் கட்சியும் பெறாதநிலையில், அதிக இடங்களைப் பிடித்த பழமைவாதக் கட்சியானது, 10 இடங்களில் வென்றுள்ள ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பதில் இறங்கியுள்ளது. 

ஜனநாயக ஐக்கியக் கட்சிக்கும் தெரசா மே-யின் பழமைவாதக் கட்சிக்குமிடையே ஆட்சியமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. பத்து இடங்களை வென்றுள்ள ஜ.ஐ.கட்சியானது பழமைவாதக் கட்சிக்குத்தான் ஆதரவளிக்கும்; தொழிலாளர் கட்சிக்கு எப்போதும் துணையாக இருக்காது என்பதை அக்கட்சியின் தலைவர் டோட்ஸ் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனின் அரசமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படும் அதிக எம்.பி.க்களின் தலைவர், ஆட்சி அமைப்பதற்கான ஒப்புதலை அரசியிடம் பெறவேண்டும் என்பது நடைமுறை. இங்கிலாந்து நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு அரசியைச் சந்திக்கும் பிரதமர் தெரசா மே, ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்க அனுமதி கோருவார். 

தொங்கு நாடாளுமன்ற நிலை ஏற்பட்டதால், ஆளும் கட்சிக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவேண்டும் அல்லது ஜனநாயக ஐக்கிய கட்சியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பழமைவாதக் கட்சி ஆட்சி அமைக்கலாம். இதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறை எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பான ஜனநாயக ஐக்கியக் கட்சியின் நிலைப்பாட்டை பழமைவாதக்கட்சி ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close