Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"மோசமான நாளை எதிர்கொள்ள நான் ஒன்றும் பெண் இல்லை!" ரஷ்ய அதிபர் சர்ச்சை பேச்சு

ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மீண்டும் ஒருமுறை தன் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் (Oliver Stone), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பற்றி ’The Putin Chronicles' என்கிற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். நான்கு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த ஆவணப் படத்தில், ஓர் அதிபரின் ஒருநாள் வாழ்க்கை முதல் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எர்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்தது வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி புதின் பேசியுள்ளார். 

அதில், “ரஷ்ய நாடாளுமன்றம் எப்போதாவது மோசமான நாளாக உங்களுக்கு இருந்துள்ளதா?'' என்ற கேள்விக்கு, “எனக்கு மோசமான நாள்கள் எதுவுமில்லை. ஏனென்றால், நான் பெண் அல்ல” என்று கூறியுள்ளார். இது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தான் கூறிய கருத்தை நியாயப்படுத்தும் வகையில், “நான் யாரையும் அவமதிப்பதற்காக கூறவில்லை. சில இயற்கை நிகழ்வுகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்” என்கிற பாணியில் பேசியுள்ளார். 

அதாவது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பற்றியும் அத்தகைய நாள்களில் அவர்கள் திறம்பட வேலை செய்வதில்லை என்பதையுமே இப்படிக் குறிப்பிட்டுள்ளார் புதின். சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்குச் சமூக வலைதளத்தில் பலரும் கொந்தளித்துள்ளனர். 'இவரின் ஆணாதிக்கச் சிந்தனை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சிந்தனைக்கு நிகராக உள்ளது' என்று புதினை விமர்சித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர்அதே ஆவணப்பட பேட்டியில், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியும் புதின் கேலியாக பேசியிருக்கிறார். அதாவது, ரஷ்யா ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக கூறிய புதின், “நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளருக்கு அருகில் குளிக்க மாட்டேன். ஏனென்றால், நான் அவரின் உணர்ச்சிகளைத் தூண்ட விரும்பவில்லை” என்று கேலியாக பேசியுள்ளார். தொடர்ந்து, ''நான் ஒரு ஜூடோ மாஸ்டரும்கூட” என்று குறிப்பிட்டிருப்பது, வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. 

விளாடிமிர் புதின் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவது புதிதல்ல. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஹிலரி கிளிண்டனை விமர்சித்து, “பெண்களுக்குப் பலவீனம் என்பது, அவ்வளவு மோசமான குணாதிசயமில்லை” என்றார். 

2013 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் பெண்கள் உரிமைகளை நிலைநாட்டக் கோரி, ஃபேமின் (Femen) என்ற பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மேல்சட்டையில்லாமல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த புதின், ”அவர்கள் எதற்காகக் கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் போராட்டம் எனக்குப் பிடித்திருந்தது” என கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

மேலும், பெண்களுக்கு எதிரான சட்டங்களையும் புதின் உருவாக்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம், 'வீட்டில் நடத்தப்படும் வன்முறை குற்றமாகாது' என்ற சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் புதிய சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்படாதவரை, குற்றம்சாட்டப்பட்டவர் சிறை செல்லவேண்டியதில்லை. ஆனால், ரஷ்யாவில் வீட்டில் நடக்கும் வன்முறையால், ஒவ்வொரு மாதமும் கிட்டதட்ட 600 பெண்கள் மரணமடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலின பேதங்களை நீக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டிய ஒரு நாட்டின் அதிபரே, பின் விளைவுகள் பற்றி யோசிக்காது பெண்கள் குறித்து இவ்வாறு பேசுவது வேதனையானது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close