Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெளிவான முடிவை அரசு எடுக்க வேண்டும்... ஜி.எஸ்.டி குறித்து விஜயகாந்த் கருத்து!

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே மத்திய அரசின் ஜி.எஸ்.டி திட்டத்துக்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜி.எஸ்.டி மசோதா குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'ஜி.எஸ்.டி திட்டத்தின் கீழ் திரைப்படங்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. பாகுபலி போன்ற பெரும் பொருள் செலவில் உருவாகும் படத்துக்கும், சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படத்துக்கும் ஒரே மாதிரி வரி என்பது இந்த தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிக வரிவிதிப்பின் காரணமாக, இந்த தொழிலில் இருந்து வெளியேறும் நிலையும் ஏற்படும். அதனால், சிறிய தொழில் செய்வோர், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' என்று  அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓட்டல்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டிருப்பதும் பொதுமக்களை பாதிக்கும் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close