Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலையில் போராட்டம் மாலையில் விபத்து... பாம்பன் பாலத்தில் தொடரும் அவல நிலை!

பாம்பனில் நடக்கும் தொடர் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று காலை மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று மாலை மறுபடியும் ஒரு விபத்து நடந்துள்ளது. 

 

பாம்பன் சாலை பாலத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்கு பாலத்தில் புதிதாக போடப்படும் ரப்பர் சாலைதான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை விபத்தை ஏற்படுத்தும் ரப்பர் சாலையை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்தைத் தடுக்க பாலத்தில் கூடுதல் போலீஸாரை நிறுத்தவும், வாகனங்கள் வழுக்காமல் செல்ல  ரப்பர் சாலை மீது மாற்று நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்தார் கோட்டாட்சியர். 

அதிகாரிகள்  உறுதிமொழி அளித்த 6 மணி நேரத்துக்குள்ளாகவே அடுத்த விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். பாலத்தில் இன்று மாலை பேருந்தும் - இரண்டு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பாம்பனைச் சேர்ந்த ஜெபஸ்டியான் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார். இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க காத்திருக்கிறதோ பாம்பன் பாலத்தில் போடப்பட்டுள்ள ரப்பர் சாலை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close