Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அண்ணன் வைகோவை தடுத்தது கண்டிக்கத்தக்கது'...வைகோவுக்கு ஸ்டாலின் ஆதரவு!

மலேசிய விமான நிலையத்தில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழையத்  தடை விதிக்கப்பட்டது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் இருப்பதால்தான் இந்த தடை நடவடிக்கை என்று மலேசியா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்றிரவு, விமானத்தில் அவர் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். மேலும், விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மலேசியாவின் இந்தச் செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ மலேசிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'இந்தியப் நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் அண்ணன் வைகோ அவர்களின் கைது பற்றி மத்திய அரசு உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது. ஆகவே இந்திய வெளியுறவுத்துறை, மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து அண்ணன் வைகோ அவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரைக் கௌரவமாக நடத்திடத் தக்க நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும்' மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close