Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை வனப் பகுதியில் யானை பலி!

கோவை மதுக்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக  இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து வந்த ஒற்றை காட்டு யானை, அய்யாசாமி மலை வனப்பகுதியில் இன்று உயிரிழந்துள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்கள் யானைகள் இடபெயர்ச்சியானது நடைபெறும், இம்முறை இரண்டு ஆண் யானைகள் மதுக்கரை வனப்பகுதியில் சுற்றி வந்தது. இதில் ஒன்று கடந்த வாரம் வெள்ளலூர் பகுதியில் புகுந்து ஒரே நாளில் நான்கு பேரை தாக்கியதால், யானையைப் பிடித்து பொள்ளாச்சி வரகளியாறு வனத்தில் விடப்பட்டது. இந்நிலையில் மற்றொரு ஆண்  யானை,  மதுக்கரை, தீத்திபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் கடந்த சில நாள்களாக சுற்றி வந்தது. இதனை தடுத்து வனப்பகுதிக்குள் விரட்ட  வனத்துறையினர் தனி குழு அமைத்து கண்காணித்து வந்தனர். இதில் யானைக்கு உடல் நல குறைபாடு இருப்பது தெரியவந்தது. எனவே அதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்திருந்தனர். ஆனால் காட்டுக்குள் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானை, மதுக்கரையை அடுத்த அய்யாசாமி மலை வனப்பகுதியில் பரிதாபமாக இறந்த கிடந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வனப் பாதுகாவலர்  ராம சுப்புரமணியம் வந்தார். பின்னர், கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. முதல்கட்ட ஆய்வில், இறந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கும் எனவும் , வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் குடல் புழு அதிகரித்து இருந்ததின் காரணமாக யானை  உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close