Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கருணாநிதி சிறந்த ராஜதந்திரி... ஸ்டாலின் செயல்படாத தலைவர்' அன்புமணி விளாசல்!

தமிழகத்தில் தற்போது இருக்கும் பரபரப்பான அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விரிவாக பேசினார்

அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல்லில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ''தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பா.ம.கதான் முதன்முதலில் வழக்கு தொடுத்தது. ஜெயலலிதா ஆட்சியில் 600 மதுக்கடைகள், எடப்பாடி ஆட்சியில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழகத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் 50 முதல் 60 சதவிகித மதுபான கடைகள் மூடப்படவில்லை. கிட்டத்தட்ட பெரும்பாலான  மதுபான கடைகள் மூடப்பட்டதாக கூறும் நிலையில் 15 சதவிகித விற்பனை மட்டுமே குறைந்துள்ளதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதன் மூலம் கள்ளச் சந்தையில் மது பானம் விற்பனை செய்யப்படுவது உறுதியாகிறது. 

தமிழக அரசின் கல்விக் கொள்கைகளை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய சூழலில் தமிழகத்துக்கு நடிகர்கள் தேவையில்லை. காவேரி மேலாண்மை வாரியம், மேகதாது, அட்டப்பாடி அணை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். 

கழங்கள் தேவையில்லை என்கின்ற மத்திய அரசுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் கழகங்களின் ஓட்டுகள் தேவையாக இருக்கிறது. நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 150 கோடி ரூபாயை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக ஒதுக்கி இருந்தேன். நியாயமாக பார்த்தால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் அமைய வேண்டும். ஆனால், சசிகலா குடும்பத்தினருக்காக தஞ்சாவூரில் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. 

தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. மெகா சீரியல் நடக்கிறது. இது அவமானவாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. இந்த ஆட்சி நான்காண்டு காலம் நிலைக்காது. ஆட்சியை யாரும் கலைக்க வேண்டாம். அவர்களே கலைத்து விடுவார்கள். கேரளா, கர்நாடக மாநிலங்களில் மணல் குவாரிகள் இல்லை. ஆனால், தமிழகத்தில் மணல் வளம் முழுவதும் கொள்ளை போய்விட்டது. இந்நிலையில், 70 மணல் குவாரிகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது கொள்ளையர்கள் மேலும், கொள்ளையடிக்க உதவும். மணல் குவாரிகளை இயக்க பா.ம.க விடாது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துக் கல்லூரி அமையும் என தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் அறிவித்தன. ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. 

கருணாநிதி மிகச்சிறந்த ராஜதந்திரி, ஆனால் தற்போதைய சூழலை பயன்படுத்தத் தெரியாமல் ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close