Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மலேசிய அரசின் நடவடிக்கைக்கு காரணம் இதுதான்...' : வைகோ விளக்கம்!

மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புகொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Vaiko


இந்நிலையில், வைகோ நேற்றிரவு சென்னை திரும்பினார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை வைத்துதான் வீசா பெற்றேன்.


நான் அங்கு சென்ற உடனே, என் பெயரைக் கேட்டு, 'நீங்கள் இங்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர். பின் அவர்கள், 'நீங்கள் இலங்கை தமிழரா?' என்று கேட்டனர். நான், 'இந்திய தமிழன் முன்னாள் எம்.பி' என்றேன். பின் அவர்கள், 'நீங்கள் விடுதலைப் புலிகளா?' என்றனர். நான், 'விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்' என்றேன். உடனே, 'உங்கள் மீது பல வழக்குகள்' உள்ளது என்றனர்.

Vaiko


இதையடுத்து ராமசாமியிடம் பேசினோம். அவர் மிகவும் வருத்தப்பட்டார்.  அவர் அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், நான் மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறத்தலானவன் என்று அவர்கள் கூறியதாக தெரிவித்தார். என்னை அங்கு நுழையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். என்னை ஒரு கைதி போல நடத்தினர். இதனால், கடந்த 24 மணி நேரமாக நான் சாப்பிடவில்லை. சுமார் 16 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன்.


2009 ஆம் ஆண்டு நடந்தப் போரின் போது நான் இலங்கை அரசு மீது கடுமையாக தாக்கினேன். அப்போது, ஹம்சா இலங்கை துணை தூதுவராக இருந்தார். அவர் எனது பெயரை அனைத்து தூதரகத்துக்கும் அனுப்பினார். இதனால், அப்போதே ஒரு முறை அமெரிக்காவுக்கு செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இலங்கை அரசின் நடவடிக்கையாலேயே மலேசியாவில் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் மலேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்து, இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்தது. இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனக்கு ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.


இந்த சம்பவம் தொடர்பாக நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த பிரச்னையில், மலேசியா இப்படி நடந்து கொண்டது தவறானது. இந்தியா - மலேசியா இடையே நல்ல உறவு உள்ளது. மலேசியாவில் என் மீது ஒரு வழக்குக் கூட இல்லை. இது கண்டனத்திற்குரியது" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close