Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!? அதிர்ச்சியில் மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இருக்கும் தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டையை வைத்து தயாரித்த பப்ஸ் சாப்பிட்ட இருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற உணவு பொருள்கள்தமிழக உணவு சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டதாக பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இது குறித்து தமிழக அளவில் உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், 'மாநிலத்தில் எங்கும் பிளாஸ்டிக்கால் ஆன உணவு பொருள்கள் புழக்கத்தில் இல்லை' என்று உறுதியாக சொல்லி வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு திரையரங்கத்தில் பிளாஸ்டிக் முட்டையை வைத்து தயாரித்த பப்ஸ் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வந்து மக்களை பீதி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, உடல்நல பாதிப்பு ஏற்பட்டவர்கள் திருவள்ளூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது. திருவள்ளூர் திரையரங்க சம்பவம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close