Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேப்பாக்கத்தை அடுத்து மெரினாவில் விவசாயிகள் போராட்டம்!? போலீஸ் குவிப்பு!

சேப்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் இன்று போராட்டத்தை மெரினாவுக்கு கொண்டு செல்லலாம் என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

அய்யாக்கண்ணு

டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் 41 நாள்களுக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தற்போது சென்னையில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான், விவசாயிகள் மெரினா கடற்கரையில் போராட்டத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகவல்கள் வந்தன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close