Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் பழனிசாமியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று நேரில் சந்தித்து, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று இரண்டாவது நாளாக சேப்பாக்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் 41 நாள்களுக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தற்போது சென்னையில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும், இன்று மெரினா கடற்கரையில் விவசாயிகள் போராட்டத்தை எடுத்துச்செல்ல முயலுவார்கள் என்று தகவல் வந்தது. இதையடுத்து மெரினாவில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை மற்றும் சேப்பாக்கம், விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பாக உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close