Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் தம்பிதுரை!

மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுநாள் வரைக்கும் மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் தமிழக அரசுக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுத்தார். "மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை தமிழகம் ஏற்காது. மலேசியாவில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.வில் பிளவு என்பதை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தற்காலிகமானதுதான்" என்று தம்பிதுரை கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close