Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு!

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். 

ayyakannu
 

டெல்லி ஜந்தர் மந்தரைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கினர் தமிழக விவசாயிகள். வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாள் போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை  சந்தித்து பேசி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார். ஆனால் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சென்னையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர் விவசாயிகள்.

ayyakannu
 

இந்நிலையில் இன்று முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாக்கண்ணு,  ’கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.மேலும் இரண்டு மாதத்துக்குள் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் தொடரும்’ என்று கூறினார். 

போராட்டத்தை அவர்கள் தற்காலிக வாபஸ் பெற்றுள்ளனர்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close