Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயிர் பலி வாங்கிய சென்னை சில்க்ஸ் கட்டடம்!

சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணிகளின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 

chennai silks

 

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏழு மாடிகள்கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், கடந்த மே 31 ஆம் தேதி தீ பிடித்தது. கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி, இரண்டு நாள்கள்வரை நீடித்தது. முழுவதுமாக சேதமடைந்த கட்டடத்தை இடிக்க, அரசு உத்தரவிட்டது.  இந்நிலையில் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் ஜா கட்டர் இயந்திரம் மூலம் கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வாலிபர் சரத் குமாரரும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த கோவிந்தனும் ஈடுபட்டனர். சரத்குமார் ஜா கட்டர் இயந்திர உதவியுடன் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக ஜா கட்டர் கட்டட இடிபாடுகளுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது.

மூன்றாவது மாடியை இடித்த போது ஜா கட்டர் இயந்திரம் நிலைத் தடுமாறியது. இதில் சரத் குமார் கீழே விழுந்தார். அப்போது அவர் மீது கட்டட இடிபாடுகள் விழுந்தன, இதில் சிக்கி அவர் இறந்தார். அவரது அருகில் இருந்த ஜே.சி.பி ஆப்ரேட்டர் கோவிந்தனுக்கு காயம் ஏற்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உயிரிழப்பு சம்பவத்தால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close