Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள அமைச்சரை மிரளவைத்த எஸ்எம்எஸ்

கேரள அமைச்சர்களான சுதாகரனுக்கும், கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் இந்து அமைப்பின் பெயரில் மிரட்டல் எஸ்.எம்.எஸ்.வந்துள்ளது. சீத்தாராம் யெச்சூரிக்கு ஆதரவாக பேசியதால் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

கேரள பொதுப்பணித்துறை அமைச்சரான சுதாகரனின் செல்போனுக்கு நேற்று ஒரு எஸ்.எம்.எஸ்.வந்துள்ளது. அதில், பாகிஸ்தான் உளவாளியான சீத்தாராம் யெச்சூரி மீது நடத்திய தாக்குதலுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்களும் இன்னொரு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரனும்தான் எங்களது அடுத்த குறி. அதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டிருக்கிறோம். இந்து அமைப்பினருக்கும், இந்து தெய்வங்களுக்கும் எதிராக கருத்து கூறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அமைச்சர் சுதாகரன், போலீஸ் உளவுத்துறைக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீஸாரும், உளவுத்துறையினரும் அமைச்சருக்கு எங்கிருந்து எஸ்.எம்.எஸ். வந்தது என விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏற்கெனவே அமைச்சர் சுதாகரனுக்கு கடந்த 5, 6 ஆகிய தேதிகளில் செல்போனில் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close