Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலை குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதவி… குமுறும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

காங்கிரஸ் கட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்துக்கு காஞ்சி மதியழகன் என்ற வழக்கறிஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட மதியழகனுக்கு மாவட்ட தலைவர் பதவி கொடுத்தது காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் வெங்கடாச்சலம் என்பவரின் மகன் எல்லப்பன் கொலை வழக்கில் தொடர்புடைய தேன்மொழி உள்ளிட்ட ஐந்து பேரிடம் காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில், ‘சப்-கலெக்டர் மகன்  எல்லப்பன் என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். காஞ்சிபுரம் வழக்கறிஞர் மதியழகன், எல்லப்பன் கொலைக்கு உடந்தையாக இருந்தார்’ என வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மதியழகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை காஞ்சிபுரம் காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி.ஸ்ரீநாத், ‘மதியழகன் தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாகத் தேடிவருகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close