Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் இடிப்பு பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

sarath

தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது சென்னை சில்க்ஸ் நிர்வாகம். சென்னை தியாகராய நகரில் உள்ள ஏழு மாடிகள்கொண்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில், கடந்த 5 ஆம் தேதி தீ பிடித்தது. சேதமடைந்த கட்டடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது.

sarath

இந்நிலையில், இன்று மதியம் கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, 'ஜா கட்டர்' இயந்திரத்தை இயக்கிய ட்ரைவர் சரத் (வயது 21) மற்றும் இன்னொருவர் மீதும் கட்டட இடிபாடுகள் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சரத் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் சிக்கிய இன்னொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, விபத்தில் பலியான சரத்தின் குடும்பத்திற்கு நிவாரணமாக 5 லட்ச ரூபாயை அறிவித்துள்ளது சென்னை சில்க்ஸ் நிர்வாகம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close