Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சுவாதி கொலை வழக்கு’ பட தயாரிப்பாளர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு!

 

தமிழகத்தில் அந்த நாளை, அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். சென்னை நகரின் முக்கியமான ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை, மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 


இந்த சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, ராம்குமார் என்ற ஒரு இளைஞர் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு சில மாதங்களில், அவரும் உயிரிழந்து விடுகிறார். இதனால், தற்போதுவரை இந்த இரண்டு மரணங்கள் குறித்தும் மர்மம் விலகவில்லை.  இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தை ரமேஷ் செல்வன் தயாரித்து இயக்கியுள்ளனர்.


அண்மையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து,  இந்தப் படத்தை வெளியடக் கூடாது என்றுக் கூறி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். பின், இந்தப் படம் குறித்து, படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். 


இந்நிலையில், 'சுவாதி கொலை வழக்கு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் செல்வம் மீது, மூன்று பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. ''சுவாதி பெற்றோரிடம் படம் எடுக்க அனுமதி பெறவில்லை, சென்சார் போர்டிடம் சான்றிதழ் வாங்காமல் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டனர்'' ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close