Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டசபைக் கூட்டத் தொடர்..  தினகரனிடம் சிக்கும் மந்திரிகள்....

 

                                                   சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தினகரன் வந்தபோது...

'...பச்சைமாலும், பரிதியும் நம்மகிட்ட வந்துட்டாங்கடோய்...' என்ற சந்தோஷக் குரல்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிதாய்க் கேட்கிறது...புதியவர்களின் வருகை குறித்து தினகரன் ஏரியாவிலேயே விசாரித்தோம். 'ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்னைக்குப் பின் அண்ணனுக்கு (டி.டி.வி. தினகரன்) அடுத்தடுத்து பல சோதனைகள் வந்துவிட்டன. அதைச் சரிக்கட்டும் விதமாகவும் அண்ணனைக் 'கூல்' ஆக்கவும்தான் நாங்கள் வேலையில் இறங்கியுள்ளோம்... இனி நாஞ்சில் சம்பத்தோடு, பரிதி இளம்வழுதியும் அண்ணனை ஆதரித்துப் பேசும் மேடைகளை அலங்கரிப்பார்கள்' என்று சிலாகிக்கின்றனர்.'எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் கோர்ட்டுக்கு, அண்ணன் தவறாமல் வருகிறார், இரட்டை இலையை மீட்க, தொடர்ந்து டெல்லிக்குப் போய் வந்துகொண்டிருக்கிறார். கட்சிக்காகத் தியாகத்தை மட்டுமே செய்தவரை எடப்பாடியின் குரலாக, நின்று சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். இத்தனை சோதனைகள் இருந்தபோதும் அண்ணனைத் தினமும் எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் வந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்கிற குரல்களும் அதே ஏரியாவில் கேட்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியைப் பிடித்து இருக்கிறார்கள், அடுத்து பலரை அப்படியே மடக்கப் போகிறார்கள் என்ற தகவலும் தினகரன் தரப்பைச் சூடாக்கி வைத்திருக்கிறது. 

'பரிதி இளம்வழுதி வந்தது எப்படி?'   "நாஞ்சில் சம்பத் ஒருவர் மட்டுமே அண்ணனை ஆதரித்துப் பேசி வருகிறார். இது போதாது என்று நாங்கள் பலமுறை அண்ணனிடம் எடுத்துச் சொன்னோம். பின்னரே வேலையில் இறங்கினோம். எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்துவருகிறது. முதல் ஆளாகப் பரிதி இளம்வழுதி, அண்ணனைப் பார்த்துப் பேசிவிட்டார். முன்னாள் அமைச்சர் பச்சைமாலும் அண்ணனைப் பார்த்துப் பேச முடிவாகியுள்ளது. இரண்டொரு நாளில் அண்ணனைச் சந்திக்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடும். குறிப்பாய் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அண்ணனின் விசுவாசிகள் நாங்கள் என்று சொல்லிவிட்டுப் போகத்தான் அவர்கள் வருகிறார்கள். ஆட்சி கலைப்புக்கு ஒருபோதும் அண்ணன் துணைபோக மாட்டார். ஆனாலும், எடப்பாடியின் அரசில் ஒரு சில அமைச்சர்களின் பதவி, இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடருக்குப் பின் இருக்காது.

தமிழகச் சட்டசபை வருகிற 14 ஆம் தேதி கூடுகிறது. அப்போது அண்ணனுக்கு எதிரான சூழ்நிலை அந்த அவையில் நடந்துவிடாதவரை அனைவருக்கும் நல்லது. சட்டசபையில் அண்ணன் பெயரைச் சொல்லியும், சின்னம்மா (சசிகலா) பெயரைச் சொல்லியும் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பாராட்டத்தான் செய்வார்கள். அப்போது அதற்கு எதிராக யார் பேசினாலும் அது ஆட்சிக்கும், கட்சிக்குமே ஆபத்தில்தான் போய் முடியும். டி.டி.வி. தினகரனுக்கு எதிராக செயல்படும் மந்திரிகள் அப்போது மாட்டிக்  கொள்வார்கள். அண்ணன், கட்சி அலுவலகத்துக்கு வருவது, தீவிர அரசியலில் இறங்குவது போன்ற எல்லாமே சட்டசபைச் சூழலைப் பொறுத்தே அமையும். டெல்லி அரசியலில் அண்ணன் இப்போது தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார். ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், பி.ஜே.பி அரசு அண்ணனைக் கைகழுவி விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து ரூட்களும் அண்ணனுக்கு க்ளியர் ஆக இருக்கிறது" என்றனர்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் எது நடந்தாலும் அது தினகரனுக்கு 'ப்ளஸ்' ஆகவே இருக்கும் போலிருக்கிறது... !

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close