Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை மீனவர்களின் கோரிக்கை: தமிழக மீனவர்கள் அச்சம்..!

மீன்பிடித் தடைக்காலம் முடியவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக மீனவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  இலங்கை மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக சென்னை முதல் கன்னியாகுமரி இடையிலான கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 45 நாள்கள் தடைக் காலமாக இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி துவங்கிய இந்தத் தடை வரும் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்வதற்காக மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, புதிய வலைகள் தயார் செய்து காத்திருக்கும் நிலையில் இலங்கை மீனவர்களின் அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு முன் இலங்கை மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இலங்கை வடமாகாண மீன்பிடி சங்கத்தினர் அவசரக் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அதன் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் 'தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்க இருக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளை விடுதலை செய்யக்கூடாது. தமிழக மீனவர்களால் சேதமடைந்த எங்கள் மீன்பிடி உபகரணங்களுக்கு இலங்கை அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றினால் தான் ஏற்கெனவே சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுதலை செய்ய வேண்டும்' என அதில் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கெனவே இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்களால் 143 படகுகளை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர். இவற்றை மீட்க வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக போராடியும் படகுகள் திரும்பப் பெறமுடியவில்லை. இந்நிலையில் கடந்த 60 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்ததால் வருமானம் இன்றி தவித்த மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் படகுகளை பழுது பார்த்துவிட்டு மீன்பிடிக்கச் செல்லத் தயாராக உள்ளனர். இச்சூழலில் மீனவர்கள் எல்லைத் தாண்டி வரக்கூடாது. அப்படி வரும் படகுகளை சிறைப் பிடிப்பதுடன் அவற்றை விடுவிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடக் கூடாது என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close