Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னைக் கொல்ல சதி திட்டம் நடக்கிறது... தீபா பரபரப்பு புகார்!

'என்னைக் கொல்ல சதி திட்டம் நடக்கிறது' என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

தீபா

இன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தார் அவரின் அண்ணன் மகளான தீபா. அப்போது அவர் அங்கு வந்த தனது சகோதரர் தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் அருகே இருந்த பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினரின் சமரசத்துக்குப் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்துக்கு தன்னை வரவழைத்ததில் சதித் திட்டம் இருப்பதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காலை அவரது சகோதரர் தீபக், கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் படத்துக்குப் பூஜை செய்ய தன்னை அழைத்ததாகவும், தனியாக மட்டுமே வர வேண்டும் என நிர்பந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். 'பத்திரிகையாளர்கள் இல்லை என்றால், என்னை வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பார்கள்' என்றும் தீபா குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close