Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வல்லரசு இருக்கட்டும்... முதலில் நல்லரசு கொடுங்கள்' - நடிகர் விஜய் பேச்சு!

விஜய்

பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த விருது விழாவில் 'தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்' விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் கொடுத்த படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த விருதைப் பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், விவசாயிகளின் அவலம் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது "மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. 

வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.

நாட்டில் வறட்சி மிகுந்த விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நீடித்துக்கொண்டிருக்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் சமீபத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் விவசாயிகள் நலன் குறித்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close