Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மக்கள் விரும்பாததால் பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு!'- பன்னீர்செல்வம் தகவல்

பிரிந்து செயல்பட்டுவரும் அ.தி.மு.க-வின் இரு அணிகளை இணைப்பதற்கான அ.தி.மு.க  புரட்சித்தலைவி அம்மா அணியின் பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

பன்னீச்செல்வம்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், முதலில் சசிகலா தலைமையிலும் பின்னர், தினகரன் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, 'சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து விலக்கி வைப்போம்' என்று கூறினர். இதனால் தினகரன் தலைமையில் இருந்த இரண்டாவது அணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதையடுத்து பிரிந்து கிடந்த இரண்டு அணிகள் இணைப்பதற்காக இரு அணிகளிலும் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் அணியினர், 'சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலக்கிவைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இணைப்புகுறித்து பேசுவோம்' என்று கூறினர். ஆனால், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததை அடுத்து, இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்தது. இந்நிலையில்...

திருவள்ளூர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியில் உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது. இரு அணிகள் இணைப்பு தேவையில்லை என மக்கள் நினைக்கின்றனர். எனவே, மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் மோசமான முறையில் ஆட்சி நடந்துவருகிறது.' என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close