Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் நடிகை வரலட்சுமி!

முதல்வர்  பழனிசாமியை, இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகை வரலட்சுமி

பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில்  #saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தனது பிரசாரத்தைத் துவக்கினார். பல நடிகர் நடிகைகள் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்குபெற்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் துவக்கிவைக்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம்குறித்து, மாநில அரசுக்கு ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக  நடிகை வரலட்சுமி  முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த ‘சேவ் சக்தி’ என்ற இயக்கம்மூலம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்' என்றும் வலியுறுத்துகிறார். முதல்வரிடம் விடுத்த கோரிக்கைகள் குறித்து வரலட்சுமி கூறியதாவது, ‘பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியதாகக் கூறினார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close