Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு!

போயஸ் கார்டனில், நேற்று செய்தியாளர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டது தொடர்பாக, தனியார் பாதுகாவலர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது காவல்துறை.

poes garden
 

நேற்று காலை, திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றார், அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை உள்ளே விட மறுக்கின்றனர் என தீபா ஆதரவாளர்கள் புகார் கூறினர். தீபா, தன் சகோதரர் தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் அருகே இருந்த பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில், பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில்... தீபக் அழைத்ததன் பேரில்தான் தீபா போயஸ்கார்டன் வந்ததாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்கள் கேமராவைப் பறித்து, மைக்கை உடைத்ததாக தனியார் பாதுகாவலர்கள் மீது செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர். 

இதனிடையே, போயஸ் கார்டனின் தனியார் பாதுகாவலர் தங்கையன் என்பவர், செய்தியாளர்கள் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், காவலர்களை அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கையனின் புகாரின் பேரில், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது  நான்கு பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close