Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்ற நடைமுறையிலேயே இது கிடையாது! சசிகலா மனுவைத் தள்ளுபடிசெய்தார் நீதிபதி!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், கேள்விகளை முன்கூட்டியே தரக் கோரி சசிகலா தாக்கல்செய்த மனுவை, சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. 'கேள்விகளை முன்கூட்டியே தருவது என்பது நீதிமன்ற நடைமுறையில் கிடையாது' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சசிகலா, தினகரன் ஆகியோர் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, தான் சிறையில் இருப்பதால் வழக்கில் நேரில் ஆஜராக இயலாது என்றும்,  காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சசிகலா வைத்த கோரிக்கையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறை கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கோரி சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்தபோது, அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேள்விகளை முன்கூட்டியே தருவது என்பது நீதிமன்ற நடைமுறையில் கிடையாது என்று கூறிய நீதிபதி, சசிகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close