Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்தில் பெண்ணின் கையை முறித்த போலீஸ்... காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சித் திருவிழா நடந்தது. இதனிடையே, அதில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவரான சூரஜ் என்பவர்மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

Chennai High Court


இந்தத் தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதற்கிடையே, சூரஜ்ஜைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சில நாள்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி அருகே போராட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு, பெண் ஒருவரின் கை முறிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close