Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதி கர்ணனைக் கைது செய்ய ஒத்துழைப்பு வேண்டும்: தமிழக காவல்துறைக்கு மேற்கு வங்க டி.ஜி.பி கடிதம்..!

நீதிபதி கர்ணனைக் கைது செய்வதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மேற்குவங்க டி.ஜி.பி சுரஜித் கர் புரகயஸ்தா தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனைவிதித்தது. அவரைக் கைது செய்ய மேற்கு வங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மேற்குவங்க காவல்துறையினர் நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு தமிழ்நாட்டுக்கு வந்தனர். இருப்பினும் கர்ணனைக் கைது செய்யமுடியவில்லை. கர்ணனைக் கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒருமாத காலம் ஆனபிறகும் மேற்குவங்க காவல்துறையால் அவரைக் கைது செய்யமுடியவில்லை.

இன்றுடன் நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்தநிலையில் மேற்குவங்க காவல்துறை தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'கர்ணன் தமிழகத்தில்தான் இருக்கிறார். சென்னை உள்பட பல பகுதிகளில் தேடியும் அவரைக் கைது செய்யமுடியவில்லை. கர்ணனைக் கைது செய்வதற்குத் தமிழக காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close