Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாகச் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 


இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்குப் பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியிலிருந்து தப்பித்து வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும், எம்.எல்.ஏ-க்கள் இணைவதற்காக ஓ.பி.எஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி மற்றும் தங்கம் ஆகியவை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close