Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் பிடிபட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்: காவல்துறையினர் தீவிர விசாரணை

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் நீந்திக்கொண்டிருந்த வங்கதேச வாலிபர் ஒருவரை கடலோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். 


எண்ணூர் துறைமுகம் ஒட்டிய கடல் பகுதியில் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது எண்ணூர் துறைமுகத்திலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் நடுக்கடலில் ஒருவர் நீச்சலடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைக்கண்ட மீனவர்கள், அவர் அருகில் சென்றுள்ளனர். அவரை மீனவர்கள் அவரை படகில் ஏற்றியுள்ளனர்.

அவர், உடலில் ஆடையின்றி இருந்துள்ளார். அவர் வெளிநாட்டவராக இருந்ததால், மீனவர்கள் அவரை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.

காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். பிடிபட்ட இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது என்று தெரியவந்துள்ளது. துறைமுகத்தை நோட்டமிட வந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முகமதுடன் மேலும் சிலர் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close