Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்எல்ஏ-க்கள் கூட்டம்: கூவத்தூர் விவகாரம் குறித்து ஆலோசனை

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 


சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பணம் பெற்றதாக வெளிவரும் செய்திகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் செயல்படுவது குறித்தும், மானியக் கோரிக்கைகளின்போது செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்றே நடைபெறவுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close