Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டத் தொடங்கியது ஆந்திர அரசு: 10 தமிழக கிராம மக்கள் பாதிக்கும் அபாயம்

ஆந்திர மாநிலத்தின்  சித்தூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. 

கோப்புப்படம்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆற்றின் நீர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்தடைகிறது. இந்த நிலையில் ஆந்திர அரசு லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத்தொடங்கியுள்ளது. 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த அணைகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும்பட்சத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் கொசஸ்தலை ஆற்றின் மூலம் பயன்பெற்றுவருகின்றன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close