Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடபழனியில் பரபரப்பு... வைரத்தைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த ’ட்ரிபிள் எஸ்’ கைது!

கேரளாவைச் சேர்ந்த வைர வியாபாரி சூரஜ், விருகம்பாக்கத்தில் தங்கியிருந்தார். இவர், சென்னை விருகம்பாக்கம் போலீஸில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருந்துள்ளார். அந்த புகாரில், ''சம்பவத்தன்று தனியாக இருந்தபோது ஏழு பேர் கொண்ட கும்பல் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் முகத்தை மூடியிருந்தனர். துப்பாக்கியைக்காட்டி கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினர். லாக்கரில் இருந்த பட்டை தீட்டப்படாத வைரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

xxx s

இந்தப் புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் வடபழனியில் போலீஸார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் ஒரு காரைநிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் காருக்குள் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள இடையன்குளத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஷியாம் சுந்தர் சிங் மற்றும் அவரது கூட்டாளி என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ஷியாம் சுந்தரை தென் மாவட்டங்களில் SSS (ட்ரிபிள் எஸ்) என்று அழைப்பதுண்டு. இவர் கராத்தே செல்வினின் உறவினர். இவர்மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், குண்டர் சட்டத்தில் இவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கூட்டாளிகள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளோம். கடந்த 1998ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த கான்ட்ராக்டர் பழனிவேல் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ. ராஜாவை மிரட்டிய வழக்கிலும் ஷியாம் சுந்தருக்குத் தொடர்பு உள்ளது. ஏற்கெனவே கோவில்பட்டியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

தற்போது வைரம் குறித்து ரகசிய இடத்தில் ஷியாம் சுந்தரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷியாம் சுந்தரைக் கைது செய்துள்ள தகவல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close