Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு புகார்!

டி.டி.வி.தினகரன் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் அளித்துள்ளார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவையின் நிறுவனத் தலைவர் தீபா கடந்த 11ஆம் தேதி சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு திடீரென வருகைத்தந்தார். அப்போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் தீபாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீபக் அழைத்ததின்பேரில் வந்தேன். என்மீது கார்டனில் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தினர். தினகரன் தூண்டுதல்பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார். மேலும், இது குறித்து பிரதமரை நேரில் சந்தித்துப்பேசுவேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று தீபா புகார் அளித்துள்ளார். அவரது வழக்கறிஞர்கள் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர். அதில், போயஸ் கார்டனில் தீபா மீது தாக்குதல் நடத்திய டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களைக் கைது செய்ய வேண்டும். தினகரன் தூண்டுதலின் பேரில் ஆதரவாளர்கள் தீபாவைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close