Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தீபா பேரவையுடன் கட்சி இணையுமா..?' - என்ன சொல்கிறார் மாதவன்?

நாட்டுல ஆயிரம் பிரச்னைகள் நடந்தாலும், முக்கியப் பிரச்னையாக தினந்தினம் உருவெடுப்பது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா - மாதவன் கட்சிகளின் தகராறு. தீபா - மாதவன் பிரச்னையால் தமிழ்நாட்டுக் கட்சிகள் எண்ணிக்கையில் ஒண்ணு கூடியது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். கடந்த சில மாதங்களாக ஆல்-டைம் லைம் லைட்டிலேயே இருக்கும் இருவருக்கும் இப்போது இன்னொரு பிரச்னை. நேற்று போயஸ் கார்டனில், தீபா - தீபக் - மாதவன் - ராஜா நால்வரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபக் தன்னை போயஸ் கார்டனுக்கு அழைத்ததாகவும், இப்போது மாற்றிப் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார் தீபா. பேரவையைச் சேர்ந்த ராஜா, அங்கே வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மாதவனைத் திட்டினார். என்ன நடந்தது என அறிந்துகொள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாதவனிடம் பேசினோம். 

தீபா - மாதவன்

"நேற்று போயஸ் கார்டனில் என்னதான் பிரச்னை..?"
"நேற்று காலையில் தீபாவை தீபக் போயஸ் கார்டனுக்கு வரச் சொல்லியிருக்கார். அங்கே போனதும் ரூமில் அடைச்சு வெச்சுட்டாங்கனு எனக்கு போன் பண்ணாங்க தீபா. சராசரிக் கணவனாக, தீபாவுக்கு ஆபத்து ஏற்பட்டதால் நானும் கிளம்பிப் போனேன். நேத்து நான் போனதுக்குக் காரணம் இதுதான். அங்கே போனதுக்கு அப்புறம்தான் எனக்கு மத்த விஷயங்கள் தெரியும்." 

"ராஜாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை... உங்களை ஆவேசமாகத் திட்டுகிறாரே..?"
"அவருக்கும் எனக்கும் என்ன சார் பிரச்னை... பொது இடத்தில் தவறாக நடந்துகொள்ளும் ஒருவரோடு நானும் சரிக்குச் சரியாகச் சண்டைபோட முடியுமா..? தினகரன் தரப்புக்கு எதிராக நாங்க செயல்படுறது அவங்களுக்குப் பிடிக்கலை. தினகரன், தீபக், ராஜா எல்லோரும் சேர்ந்து எங்களின் மதிப்பைக் குறைக்க முயற்சிக்கிறாங்க. தேவையில்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் எங்கமேல சுமத்துறாங்க. காவல்துறையினரும் அவங்ககூடச் சேர்ந்துக்கிட்டு என்னை மிரட்டுறாங்க."

"நீங்கள் தீபாவோடு இணக்கமாகச் செல்லும் ஐடியாவில் இருக்கிறீர்களா..? 
"தீபாவோடு இணக்கமாகப் போகும் ஐடியாவெல்லாம் இல்லை. தீபாவும் சிலரும் எடுக்குற முடிவுகள் பிடிக்காமல்தான் தனிக்கட்சி தொடங்குனேன். தீபா மட்டும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால் இந்நேரம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்திருப்பார். ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணின்னு இத்தனை பேர் அடிச்சிக்கிட்டுப் பிரிஞ்சிருக்க மாட்டாங்க. சிலரோட சூழ்ச்சிகளால் தீபாவோட மதிப்பு சரிஞ்சிடுச்சு." 

"தீபா ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இல்லாமல், 'அதை நீங்கள்தான் கூறவேண்டும்'னு தானே சொல்லிக்கிட்டு இருக்காங்க..?"
"தீபாவை அப்படிச் சொல்லவைக்கிறார்கள். அவரோடு இருப்பவர்கள் தினகரன், சசிகலா பேச்சைக் கேட்டு இப்படிச் செய்கிறார்கள். அது தீபாவுக்குப் புரியவில்லை. தீபாவைத் தெளிவாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள்."

மாதவன் - MJDMK

"தீபா நடத்தும் பேரவையோடு இணைவீர்களா..?"
"தீபாவின் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையோடு இணையமாட்டேன். என்னை நம்பி வந்திருக்கும் தொண்டர்களை ஏமாத்திட்டு நான் எப்படி இணையமுடியும்? விவசாயிகள் பிரச்னைகளுக்காக அவர்களோடு சேர்ந்து குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். தமிழக மக்களுக்கு ஒரு நல்ல அரசு வேண்டும். ஒருவேளை தீபா, தாய்க்கழகத்தோடு இணைய முடிவெடுத்தால் அவர்களோடு கூட்டணி வைப்பதைப் பற்றி யோசிப்போம்." 

"இப்போது உங்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்..?"
"கட்சியின் உறுப்பினர் விண்ணப்பப் படிவமே இன்னும் யாருக்கும் வழங்கவில்லை. இப்போது உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றிச் சொல்லமுடியாது. சட்ட விதிகளின்படி, எல்லாத் தகவல்களையும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளோம். கட்சிக்குப் பதிவு எண் வழங்கப்பட்ட பின்புதான் உறுப்பினர் சேர்க்கையைப் பற்றிக் கூற முடியும்." 

நல்லவேளை, அதை நீங்கள்தான் கூறவேண்டும்னு சொல்லி முடிக்கலை..!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close