Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடியோவில் இருப்பது நான்தான், ஆனால்... எம்எல்ஏ சரவணனின் அடடே விளக்கம்!

எம்எல்ஏ-க்களுக்குப் பேரம் பேசப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ பற்றி ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, எம்எல்ஏ., சரவணன்  விளக்கமளித்தார்.

MLA saravanan
 

அ.தி.மு.க இரு அணிகளாகப் பிளவுபட்ட சமயத்தில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் கோல்டன் பே தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்துவிடாதிருக்க, அவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இதனிடையே மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூரிலிருந்து தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார். சசிகலா அணியினர் எம்.எல்.ஏக்களுக்குப் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதாக சரவணன் குற்றம்சாட்டினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பொறுப்பேற்றார். அதன்பின்னர் கூவத்தூர் விடுதியில் உண்மையில் என்ன நடந்தது, எதற்காக எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டனர் உள்ளிட்ட கேள்விகள் விடை தெரியாமலேயே அடங்கிப் போயின .

இந்நிலையில் எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ் கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நேற்று திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டது. அந்த ஆதாரத்தில் இருந்தது வேறு யாருமில்லை, கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ சரவணன்தான். அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ குறித்து விளக்கமளிக்க ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்துப் பேசினார் சரவணன். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரவணன், ’அந்த வீடியோ பொய்யானது. குதிரை பேரம் குறித்து நான் பேசுவதுபோல் வேறு யாரோ குரல் கொடுத்துள்ளார்கள். அந்த வீடியோ வேறு இன்டர்வியூவுக்காக எடுக்கப்பட்டது. அதில் என்னைப் போன்று யாரோ டப்பிங் கொடுத்துள்ளார்கள். நான் இதைச் சட்டப்படி சந்திக்கவுள்ளேன்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close